லங்காவி மக்களவைத் தொகுதி
லங்காவி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Langkawi; ஆங்கிலம்: Langkawi Federal Constituency; சீனம்: 浮罗交怡国会议席) என்பது மலேசியா, கெடா, லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P004) ஆகும்.[6] லங்காவி மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து லங்காவி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] லங்காவி மாவட்டம்லங்காவி மாவட்டம் என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது. இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah; மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[8] பந்தாய் செனாங்இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில், தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது. லங்காவி தீவு கெடாவின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். குவா அதன் பெரிய நகரமாக உள்ளது. லங்காவிக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பந்தாய் செனாங் (Pantai Cenang) தீவு, மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதியாகும்.[9] லங்காவி மக்களவைத் தொகுதி
தேர்தல் முடிவுகள்
லங்காவி வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia