கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம்
கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Raja Uda Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Raja Uda); சீனம்: 甘榜拉惹乌达) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1] தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1] இந்த நிலையம் கம்போங் ராஜா ஊடா புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி; ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2] பொதுகம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் புறநகர் பகுதியில் கட்டப்பட்டது; மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள கம்போங் ராஜா ஊடா என்ற கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்டது. 1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து கம்போங் ராஜா ஊடா நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. சா ஆலாம் விரைவுச்சாலைஇந்த நிலையத்தில் இருந்து கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) எனும் (கெசாஸ் நெடுஞ்சாலை) (Konsortium Expressway Shah Alam Selangor - KESAS); கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (New Klang Valley Expressway - NKVE) ஆகிய நெடுஞ்சாலைகளுக்குச் செல்ல 10 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும்.[3] தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும். மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia