தேசிய நெடுஞ்சாலை 709அஈ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 709அஈ (National Highway 709AD (India)) பொதுவாக பானிபட்-காதிமா நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் தே. நெ. 709அஈ இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 9-இன் துணைச்சாலையாகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 709அஈ உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்து அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக பிஜ்னோரில் உள்ள நாகினாவில் முடிவதற்கு முன்னர் இந்தியாவின் சாம்லி, முசாபர்நகர், பிஜ்னோர் வழியாகச் செல்கிறது. இப்பகுதியின் மற்ற இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகளான 709அ மற்றும் 709ஆ சாம்லியில் 709அஈ உடன் சந்திக்கின்றன. மற்றொரு முக்கிய சந்திப்பு முசாபர்நகர் ஆகும். அங்கு இந்த நெடுஞ்சாலை (334) தில்லி-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உ. பி. மாநில நெடுஞ்சாலை 59 உடன் இணைகிறது.[2] பாதை.பானிபட்-சாம்லி-முசாபர்நகர்-ஜான்சத்-மீராபூர்-பிஜ்னோர்-நாகினா. சந்திப்புகளின் பட்டியல்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia