தேசிய நெடுஞ்சாலை 216 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 216 (தே. நெ. 216) (முன்பு தே. நெ. 214, தே. நெ. 215) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 214-ம் 214அவும் இணைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 216 என மறுபெயரிடப்பட்டன. இது கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 16-ன் சந்திப்பிலிருந்து தொடங்கி காக்கிநாடா, அமலாபுரம், திகமர்ரு (பாலகோல்லு) நரசாபுரம், மச்சிலிப்பட்டணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா வழியாகச் சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 16ஐ ஒங்கோலில் இணைக்கிறது.[1][2] விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோ ரசாயன வழித்தடம், நெடுஞ்சாலையில் முன்மொழியப்பட்ட திட்டமாகும். வழித்தடம்இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 391.3 கிலோமீட்டர்கள் ஆகும்.[2]/ இது ஆந்திராவின் காக்கிநாடா, கோணசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி. கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 216, தேசிய நெடுஞ்சாலை 16-லிருந்து கத்திப்பூடி கிராமத்தில் தொடங்கி, கொல்லப்பிரோலு, பிதாபுரம், காக்கிநாடா, யானம், மம்மிதிவாரம், அமலாபுரம், ராஜோல், திகமர்ரு (பாலகோல்லு) , நரசாபுரம், பெடானா, மச்சிலிப்பட்ணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா போன்ற நகரங்கள் வழியாகச் சென்று, ஓங்கோலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை16-உடன் இணைக்கிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia