தேசிய நெடுஞ்சாலை 75 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 75 (National Highway 75 (India)) என்பது இந்தியாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2] 2010ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை எண்களை மறு எண்ணிடும் முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) என அறியப்பட்டது. மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான மங்களூரை (மங்களூரு) கிழக்கில் வேலூர் நகரத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை இதுவாகும்.[3] தே. நெ. 75 கர்நாடகா மாநிலத்தின் மூன்று புவியியல் பகுதிகளான கரவாலி, மலேநாடு மற்றும் பயலுசீமே வழியாகப் பயணிக்கிறது.[4] பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகள்கர்நாடக மாநில சாலை 54 (பேலூர் சாலை), தேசிய நெடுஞ்சாலை 373, தேசிய நெடுஞ்சாலை 69 வழித்தடம்![]() இது கர்நாடகா மாநிலத்தில் உள்ள வந்தவாழில் தொடங்கி நெல்லியடி, சீராடி காட், சக்லேஷ்பூர், ஹாசன், பெங்களூரு, கோலார், முளுபாகிலு, வெங்கடகிரி கோட்டை, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி வழியாகத் தமிழ்நாட்டின் வேலூரில் முடிவடையும்.[2] மாநில வாரியாக பாதை நீளம் கி.மீ.[5]
சந்திப்புகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia