தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 6, (National Highway 6 (India)) பொதுவாக தே. நெ. 6 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மேகாலயா, அசாம், மிசோரம் வழியாகச் செல்கிறது.[2] தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 6 பழைய தேசிய நெடுஞ்சாலைகளாக 40, 44, 154 மற்றும் 54 எனப் பல்வேறு எண்கள் வழங்கப்பட்டது.[3] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 6, ஜோராபட், சில்லாங், ஜோவாய், பதர்பூர், பஞ்ச்கிராம், கோலாசிப், கான்பூய், அய்சால், செலிங், லும்துய், கவ்த்லிர், துய்சென், நெய்தான், சாம்பாய் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்தியா/மியான்மர் எல்லையில் சோகாவ்தார் அருகே முடிவடைகிறது.[2][4]செப்டம்பர் 2008-இல், சில்சாரின் வடமேற்கில் உள்ள நர்புக் சரணாலயத்திற்குள் மேகாலயாவின் சோனாப்பூரில் 120 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இது மேகாலயாவை மேகாலயாவின் தென்கிழக்கில் உள்ள அசாமின் பராக் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது. சந்திப்புகள்
ஆசிய நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 6-இல் ஜோராபட் முதல் சில்லாங் வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 1 மற்றும் ஆசிய நெடுஞ்சாலை 2-இன் ஒரு பகுதியாகும்.[5] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia