சிங்காநல்லூர் தொடருந்து நிலையம்
சிங்காநல்லூர் தொடருந்து நிலையம் (Singanallur railway station) என்பது கோயம்புத்தூர் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம் இருகூர் மற்றும் பீளமேடு இடையே அமைந்துள்ளது. [1] கோவை புறநகர் தொடருந்துகோயம்புத்தூர் புறநகர் இரயில்வே கோயம்புத்தூர் நகரத்திற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு வட்ட புறநகர் தொடருந்து சேவை ஆகும்.[2] கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், வெள்ளலூர், இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு வழியாகச் செல்ல வட்ட ரயில் பாதை உதவும். இது நிச்சயமாக நகரச் சாலைகளின் நெரிசலைக் குறைக்கும். இணைப்புசிங்காநல்லூர் தொடருந்து நிலையம்14 கி.மீ. தொலைவில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உக்கடம் பேருந்து முனையம் சுமார் 10.3 கி.மீ. தொலைவிலும் சாய்பாபா நகர் பேருந்து முனையம் சுமார் 14 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 9.9 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 4.6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia