கால்சியம் பெர்மாங்கனேட்டு
கால்சியம் பெர்மாங்கனேட்டு (Calcium permanganate) என்பது Ca(MnO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் உலோகம் மற்றும் இரண்டு பெர்மாங்கனேட்டு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் இச்சேர்மம் காற்றில் எரியாது ஆனால் எரியும் பொருளின் எரிதலைத் தூண்டுகிறது, எரியும் பொருள் எரிந்து முடிந்தவுடன் இறுதியாக நிற்கும் கலவை வெடிக்க நேரிடலாம். எரியக்கூடிய நீர்மங்கள் கால்சியம் பெர்மாங்கனேட்டுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் உடனடியாக தீப்பிடிக்க நேரிடும். கந்தக அமிலத்துடன் தீப்பற்றலும் பென்சீன், கார்பன் டை சல்பைடு, இரு எத்தில் ஈதர், எத்தில் ஆல்ககால் பெட்ரோலியம் அல்லது இதர கரிமப் பொருட்களுடன் தொடர்பால் வெடித்தலும் நிகழும். இவ்வாறே அசிட்டிக் அமிலம் அல்லது அசிட்டிக் நீரிலியுடன் சேர்க்கப்படும் போது குளிரூட்டப்படாவிட்டால் வெடித்தல் ஏற்படும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் கால்சியம் குளோரைடு அல்லது அலுமினியம் பெர்மாங்கனேட்டுடன் கால்சியம் ஆக்சைடு வினைபுரிவதால் கால்சியம் பெர்மாங்கனேட்டு உண்டாகிறது. பயன்கள்பற்களின் வெண்மைக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.[2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia