புனே சுற்றுப்பாதை. (நான்காம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி.
தேசிய நெடுஞ்சாலை 4 அல்லது என்.எச்4 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1235 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா 371 கி.மீ. நீளப் பகுதியையும், கர்நாடகா 658 கி.மீ. நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 83 கி.மீ. ஐயும், தமிழ் நாடு 123 கி.மீ. நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன.
இந்த நான்கு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும், ஊர்களையும் இச்சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச்சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்தக் குறுங்கட்டுரைஇந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.