பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு Potassium hexafluorozirconate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு, பொட்டாசியம் சிக்கோனியம் அறுபுளோரைடு, பொட்டாசியம் புளோரோசிர்க்கோனேட்டு
இனங்காட்டிகள்
16923-95-8 Y
ChemSpider
11221760
EC number
240-985-6
InChI=1S/6FH.2K.Zr/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6 Key: BJZIJOLEWHWTJO-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
56828182
F[Zr-2](F)(F)(F)(F)F.[K+].[K+]
பண்புகள்
F 6 K 2 Zr
வாய்ப்பாட்டு எடை
283.41 g·mol−1
தோற்றம்
வெண்மையான படிகத் தூள்
அடர்த்தி
3.48 கி/செ.மீ3
கரையும்
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Potassium hexafluorozirconate ) என்பது K2 ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . பொட்டாசியம் , புளோரின் , சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
தனிமங்களின் கரைசல்களிலிருந்து பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு வீழ்படிவாக்கப்படுகிறது.
2KF + ZrF4 -> K2 ZrF6 ↓
2KCl + (NH4 )2ZrF6 -> K2 ZrF6 ↓ + 2NH4Cl}}
மேலும், தொழில்துறையில், 600–700°செல்சியசு வெப்பநிலையில் பொட்டாசியம் அறுபுளோரோசிலிக்கேட்டுடன் செறிவூட்டப்பட்ட சிர்கோனியம் தாதுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[ 1]
இயற்பியல் பண்புகள்
பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு மணமற்ற வெள்ளை படிகத் தூளாக உருவாகிறது.
C 2/c (எண்.15) என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு படிகமாகிறது.[ 2]
பயன்கள்
உலோக சிர்கோனியத்தின் மின்னாற்பகுப்பு முறை உற்பத்தியில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு ஓர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
தீத்தடுப்பானாகவும்,[ 3] மக்னீசியம் மற்றும் அலுமினிய கலப்புலோகங்களில் சுத்திகரிப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[ 4]
மேற்கோள்கள்
↑ Lewis, Alison; Olsen, Christine (2007). BIWIC 2007: 14th International Workshop on Industrial Crystallization : September 9th-11th, 2007, University of Cape Town, Cape Town, South Africa (in ஆங்கிலம்). IOS Press . p. 186. ISBN 978-1-58603-790-1 . Retrieved 26 February 2024 .
↑ Hoppe, R.; Mehlhorn, B. (September 1976). "Die Kristallstruktur von K 2 ZrF 6" . Zeitschrift für anorganische und allgemeine Chemie 425 (3): 200–208. doi :10.1002/zaac.19764250303 . https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19764250303 . பார்த்த நாள்: 26 February 2024 .
↑ Lewis, David M.; Rippon, John A. (20 May 2013). The Coloration of Wool and Other Keratin Fibres (in ஆங்கிலம்). John Wiley & Sons . p. 115. ISBN 978-1-118-62509-5 . Retrieved 26 February 2024 .
↑ "Potassium hexafluorozirconate | CAS 16923-95-8 | Connect Chemicals" . connectchemicals.com. Retrieved 26 February 2024 .
சிர்க்கோனியம் (II) சிர்க்கோனியம் (III) சிர்க்கோனியம் (IV)