இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு (Strontium nitrate) என்பது Sr(NO3)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் சிவப்பு வண்னத்தை உருவாக்கும் வண்ணமூட்டியாகவும் ஆக்சிசனேற்றியாகவும் பட்டாசுத் தொழிலில் உபயோகமாகிறது. தயாரிப்புஇசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உருவாகிறது.[2] ![]() . பயன்கள்பட்டாசுத் தொழில்நுட்பத்தில் அடர் சிவப்பு வண்ண ஒளியை உருவாக்க, பிற இசுட்ரோன்சியம் உப்புகளைப் போல இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆக்சிசனேற்றும் பண்பு இத்தொழில்நுட்பத்திற்கு பெரிதும் பயனாகிறது. இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு தோல் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைப்பதற்கு உதவுகிறது. கிளைக்காலிக் அமிலத்துடன் கலந்து பயன்படுத்தினால் தோல் அரிப்பை குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்கிறது[3]. கிளைக்காலிக் அமிலத்தைத் தனியாக பயன்படுத்துவதை விட இக்கலவை சற்று மேம்பட்ட உணர்வை அளிப்பதாக அறியப்பட்டுள்ளது. உயிர் வேதியியல் பயன்Ca2+ அயனியின் அயனி ஆரத்திற்குச் சமமான ( முறையே 1.13 , 0.99 A) ஈரிணைதிறன் அயனியான Sr2+ அயனிகள் நரம்பியல் மருத்துவத்தில் கால்சியத்திற்கு இணையாகச் செயல்படுகின்றன என்பதால் இவை மின்னுடலியல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia